1. என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்; [QBR2] நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். [QBR]
2. நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, [QBR2] உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன்.
3. யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்; [QBR2] அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது. [QBR]
4. உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்; [QBR2] அவர்கள் உம்முடைய வல்லமையான செயல்களைச் சொல்வார்கள். [QBR]
5. நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும், [QBR2] உமது அதிசயமான செயல்களையும் பற்றித் தியானிப்பேன். [QBR]
6. அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; [QBR2] நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன். [QBR]
7. அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; [QBR2] உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள்.
8. யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்; [QBR2] அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் [QBR2] உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.
9. யெகோவா எல்லோருக்கும் நல்லவர்; [QBR2] தாம் படைத்த அனைத்தின்மேலும் இரக்கமுள்ளவர். [QBR]
10. யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; [QBR2] உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள். [QBR]
11. அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி, [QBR2] உம்முடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். [QBR]
12. அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், [QBR2] உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள். [QBR]
13. உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு; [QBR2] உம்முடைய ஆளுகை எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கிறது. யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்; [QBR2] தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர். [QBR]
14. யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி, [QBR2] தாழ்த்தப்பட்ட அனைவரையும் உயர்த்துகிறார். [QBR]
15. எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன; [QBR2] ஏற்றவேளையில் நீர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறீர். [QBR]
16. நீர் உம்முடைய கையைத் திறந்து, [QBR2] எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர்.
17. யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும் [QBR2] தம்முடைய செயல்களிளெல்லாம் உண்மையுள்ளவராயும் இருக்கிறார். [QBR]
18. யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும், [QBR2] உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார். [QBR]
19. அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்; [QBR2] அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார். [QBR]
20. யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்; [QBR2] ஆனால் கொடியவர்கள் அனைவரையும் தண்டிப்பார்.
21. என் வாய் யெகோவாவைத் துதிக்கும். [QBR2] எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை [QBR2] என்றென்றும் துதிக்கட்டும். [PE]