1. [QS]என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, [QE][QS2]அவர் என் கைகளை யுத்தத்திற்கும், [QE][QS2]என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார். [QE]
2. [QS]அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, [QE][QS2]என் அரண், என் மீட்பர், [QE][QS]அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், [QE][QS2]நாடுகளை[* நாடுகளை என பல கையெழுத்துப் பிரதிகளிலும், என் மக்கள் என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது. ] அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார். [QE][PBR]
3. [QS]யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், [QE][QS2]வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்? [QE]
4. [QS]மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; [QE][QS2]அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன. [QE][PBR]
5. [QS]யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; [QE][QS2]மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும். [QE]
6. [QS]மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; [QE][QS2]உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும். [QE]
7. [QS]உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; [QE][QS]பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் [QE][QS2]என்னை விடுவித்துத் தப்புவியும். [QE]
8. [QS]அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; [QE][QS2]அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன. [QE][PBR]
9. [QS]இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; [QE][QS2]பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன். [QE]
10. [QS]ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் [QE][QS2]உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே. [QE][PBR]
11. [QS]கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; [QE][QS2]பொய்பேசும் வாய்களையும், [QE][QS]வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய [QE][QS2]வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும். [QE][PBR]
12. [QS]அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் [QE][QS2]நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; [QE][QS]எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென [QE][QS2]செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள். [QE]
13. [QS]எங்கள் களஞ்சியங்கள் [QE][QS2]சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; [QE][QS]எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், [QE][QS2]பதினாயிரக்கணக்கிலும் பெருகும். [QE]
[QS2]14. எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; [QE][QS]எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, [QE][QS2]கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; [QE][QS2]எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை. [QE]
15. [QS]இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QE][QS2]யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]