1. என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, [QBR2] அவர் என் கைகளை யுத்தத்திற்கும், [QBR2] என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார். [QBR]
2. அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, [QBR2] என் அரண், என் மீட்பர், [QBR] அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், [QBR2] நாடுகளை [*நாடுகளை என பல கையெழுத்துப் பிரதிகளிலும், என் மக்கள் என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது.] அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.
3. யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், [QBR2] வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்? [QBR]
4. மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; [QBR2] அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.
5. யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; [QBR2] மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும். [QBR]
6. மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; [QBR2] உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும். [QBR]
7. உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; [QBR] பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் [QBR2] என்னை விடுவித்துத் தப்புவியும். [QBR]
8. அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; [QBR2] அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.
9. இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; [QBR2] பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன். [QBR]
10. ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் [QBR2] உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
11. கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; [QBR2] பொய்பேசும் வாய்களையும், [QBR] வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய [QBR2] வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.
12. அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் [QBR2] நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; [QBR] எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென [QBR2] செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள். [QBR]
13. எங்கள் களஞ்சியங்கள் [QBR2] சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; [QBR] எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், [QBR2] பதினாயிரக்கணக்கிலும் பெருகும். [QBR2]
14. எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; [QBR] எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, [QBR2] கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; [QBR2] எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை. [QBR]
15. இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QBR2] யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [PE]