1. [QS]யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், [QE][QS2]இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; [QE][QS]உமது உண்மையின்படியும் [QE][QS2]நீதியின்படியும் எனக்கு பதில் தாரும். [QE]
2. [QS]உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். [QE][QS2]வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே. [QE]
3. [QS]பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், [QE][QS2]அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; [QE][QS]வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், [QE][QS2]அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான். [QE]
4. [QS]ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; [QE][QS2]பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. [QE]
5. [QS]நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; [QE][QS2]உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; [QE][QS2]உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். [QE]
6. [QS]நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; [QE][QS2]வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது. [QE][PBR]
7. [QS]யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; [QE][QS2]என் உள்ளம் சோர்ந்துபோகிறது; [QE][QS]உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், [QE][QS2]நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். [QE]
8. [QS]காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், [QE][QS2]ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; [QE][QS]நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், [QE][QS2]ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். [QE]
9. [QS]யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; [QE][QS2]ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். [QE]
10. [QS]நீரே என் இறைவன்; [QE][QS2]ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; [QE][QS]உமது நல்ல ஆவியானவர் [QE][QS2]என்னை நல்வழியில் நடத்துவாராக. [QE][PBR]
11. [QS]யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; [QE][QS2]உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும். [QE]
12. [QS]உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; [QE][QS2]என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; [QE][QS2]ஏனெனில் நான் உமது அடியவன். [QE]