1. யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், [QBR2] இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; [QBR] உமது உண்மையின்படியும் [QBR2] நீதியின்படியும் எனக்கு பதில் தாரும். [QBR]
2. உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். [QBR2] வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே. [QBR]
3. பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், [QBR2] அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; [QBR] வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், [QBR2] அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான். [QBR]
4. ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; [QBR2] பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. [QBR]
5. நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; [QBR2] உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; [QBR2] உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். [QBR]
6. நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; [QBR2] வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
7. யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; [QBR2] என் உள்ளம் சோர்ந்துபோகிறது; [QBR] உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், [QBR2] நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். [QBR]
8. காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், [QBR2] ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; [QBR] நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், [QBR2] ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். [QBR]
9. யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; [QBR2] ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். [QBR]
10. நீரே என் இறைவன்; [QBR2] ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; [QBR] உமது நல்ல ஆவியானவர் [QBR2] என்னை நல்வழியில் நடத்துவாராக.
11. யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; [QBR2] உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும். [QBR]
12. உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; [QBR2] என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; [QBR2] ஏனெனில் நான் உமது அடியவன். [PE]