1. [QS]நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன். [QE]
2. [QS]அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; [QE][QS2]என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன். [QE][PBR]
3. [QS]என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், [QE][QS2]நீரே என் வழியை அறிகிறவர்; [QE][QS]நான் நடக்கும் பாதையில் [QE][QS2]மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள். [QE]
4. [QS]நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை; [QE][QS2]என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை. [QE][QS]எனக்குப் புகலிடம் இல்லை; [QE][QS2]என்னைக் கவனிக்க எவருமில்லை. [QE][PBR]
5. [QS]யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; [QE][QS2]“நீரே என் புகலிடம், [QE][QS2]வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன். [QE][PBR]
6. [QS]என் கதறலுக்குச் செவிகொடும்; [QE][QS2]நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; [QE][QS]என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QE][QS2]ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். [QE]
7. [QS]நான் உமது பெயரைத் துதிக்கும்படி, [QE][QS2]என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்; [QE][QS]அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம், [QE][QS2]நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள். [QE]