தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; [QBR2] நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன். [QBR]
2. அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; [QBR2] என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.
3. என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், [QBR2] நீரே என் வழியை அறிகிறவர்; [QBR] நான் நடக்கும் பாதையில் [QBR2] மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள். [QBR]
4. நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை; [QBR2] என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை. [QBR] எனக்குப் புகலிடம் இல்லை; [QBR2] என்னைக் கவனிக்க எவருமில்லை.
5. யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; [QBR2] “நீரே என் புகலிடம், [QBR2] வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.
6. என் கதறலுக்குச் செவிகொடும்; [QBR2] நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; [QBR] என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QBR2] ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். [QBR]
7. நான் உமது பெயரைத் துதிக்கும்படி, [QBR2] என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்; [QBR] அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம், [QBR2] நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
சங்கீதம் 142:118
1 நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன். 2 அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன். 3 என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், நீரே என் வழியை அறிகிறவர்; நான் நடக்கும் பாதையில் மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள். 4 நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை; என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை. எனக்குப் புகலிடம் இல்லை; என்னைக் கவனிக்க எவருமில்லை. 5 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; “நீரே என் புகலிடம், வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன். 6 என் கதறலுக்குச் செவிகொடும்; நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். 7 நான் உமது பெயரைத் துதிக்கும்படி, என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்; அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம், நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References