தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; [QBR2] நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும். [QBR]
2. என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; [QBR2] என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3. யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; [QBR2] என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். [QBR]
4. தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து [QBR2] கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி [QBR] என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; [QBR2] அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
5. நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; [QBR2] நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். [QBR] என் தலை அதை புறக்கணிக்காது; [QBR2] என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.
6. அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து [QBR2] கீழே தள்ளிவிடப்படுவார்கள்; [QBR] அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை [QBR2] கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள். [QBR]
7. “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், [QBR2] எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” [QBR2] என்று அவர்கள் சொல்வார்கள்.
8. ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; [QBR2] நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும். [QBR]
9. தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், [QBR2] அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். [QBR]
10. நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, [QBR2] கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
சங்கீதம் 141:33
1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும். 2 என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 3 யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4 தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும். 5 நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். என் தலை அதை புறக்கணிக்காது; என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது. 6 அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவார்கள்; அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள். 7 “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். 8 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும். 9 தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். 10 நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References