தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; [QE][QS2]வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். [QE]
2. [QS]அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, [QE][QS2]நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள். [QE]
3. [QS]அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; [QE][QS2]அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. [QE][PBR]
4. [QS]யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, [QE][QS2]வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; [QE][QS2]அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். [QE]
5. [QS]பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, [QE][QS2]என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள். [QE][PBR]
6. [QS]யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; [QE][QS2]யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். [QE]
7. [QS]ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, [QE][QS2]நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும். [QE]
8. [QS]யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; [QE][QS2]அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும். [QE][PBR]
9. [QS]என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; [QE][QS2]அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும். [QE]
10. [QS]எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; [QE][QS2]அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், [QE][QS2]சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும். [QE]
11. [QS]அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; [QE][QS2]வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும். [QE][PBR]
12. [QS]யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், [QE][QS2]எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன். [QE]
13. [QS]நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; [QE][QS2]நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 140 / 150
1 யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். 2 அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள். 3 அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. 4 யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். 5 பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள். 6 யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். 7 ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும். 8 யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும். 9 என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும். 10 எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும். 11 அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும். 12 யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன். 13 நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 140 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References