1. யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; [QBR2] வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். [QBR]
2. அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, [QBR2] நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள். [QBR]
3. அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; [QBR2] அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
4. யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, [QBR2] வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; [QBR2] அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். [QBR]
5. பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, [QBR2] என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
6. யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; [QBR2] யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். [QBR]
7. ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, [QBR2] நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும். [QBR]
8. யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; [QBR2] அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
9. என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; [QBR2] அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும். [QBR]
10. எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; [QBR2] அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், [QBR2] சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும். [QBR]
11. அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; [QBR2] வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
12. யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், [QBR2] எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன். [QBR]
13. நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; [QBR2] நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள். [PE]