1. [QS]யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர், [QE][QS2]நீர் என்னை அறிந்துமிருக்கிறீர். [QE]
2. [QS]நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; [QE][QS2]நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர். [QE]
3. [QS]நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்; [QE][QS2]என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர். [QE]
4. [QS]என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே, [QE][QS2]யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர். [QE]
5. [QS]நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, [QE][QS2]நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர். [QE]
6. [QS]இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், [QE][QS2]விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது. [QE][PBR]
7. [QS]உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? [QE][QS2]உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்? [QE]
8. [QS]நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; [QE][QS2]என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். [QE]
9. [QS]அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், [QE][QS2]கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும், [QE]
10. [QS]அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; [QE][QS2]உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். [QE]
11. [QS]“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், [QE][QS2]ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும், [QE]
12. [QS]இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; [QE][QS2]இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; [QE][QS2]ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது. [QE][PBR]
13. [QS]என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்; [QE][QS2]என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர். [QE]
14. [QS]நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால், [QE][QS2]நான் உம்மைத் துதிக்கிறேன்; [QE][QS]உமது செயல்கள் ஆச்சரியமானவை, [QE][QS2]நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன். [QE]
15. [QS]நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது, [QE][QS2]நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது, [QE][QS2]என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை. [QE]
16. [QS]உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன; [QE][QS2]எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும், [QE][QS2]அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. [QE]
17. [QS]இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! [QE][QS2]அவைகளின் தொகை எவ்வளவு பெரியது! [QE]
18. [QS]நான் அவைகளை எண்ணப்போனால், [QE][QS2]அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்; [QE][QS2]நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன். [QE][PBR]
19. [QS]இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்! [QE][QS2]இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்! [QE]
20. [QS]அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்; [QE][QS2]உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள். [QE]
21. [QS]யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ? [QE][QS2]உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ? [QE]
22. [QS]ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன். [QE][QS2]அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன். [QE]
23. [QS]இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; [QE][QS2]என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும். [QE]
24. [QS]உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து, [QE][QS2]நித்திய வழியிலே என்னை நடத்தும். [QE]