1. [QS]யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; [QE][QS2]“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். [QE]
2. [QS]நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், [QE][QS2]உமது பெயரைத் துதிப்பேன்; [QE][QS]ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக [QE][QS2]உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். [QE]
3. [QS]நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; [QE][QS2]நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். [QE][PBR]
4. [QS]யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் [QE][QS2]உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். [QE]
5. [QS]யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், [QE][QS2]அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். [QE][PBR]
6. [QS]யெகோவா உயர்ந்தவராக இருந்தும், [QE][QS2]தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; [QE][QS2]ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். [QE]
7. [QS]துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், [QE][QS2]நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். [QE][QS]என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; [QE][QS2]உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். [QE]
8. [QS]யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; [QE][QS2]யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; [QE][QS2]உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும். [QE]