1. [QS]பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, [QE][QS2]சீயோனை நினைத்தபோது அழுதோம். [QE]
2. [QS]அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் [QE][QS2]எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். [QE]
3. [QS]ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், [QE][QS2]அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; [QE][QS]எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, [QE][QS2]“சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள். [QE][PBR]
4. [QS]வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் [QE][QS2]யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்? [QE]
5. [QS]எருசலேமே! நான் உன்னை மறந்தால், [QE][QS2]என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக. [QE]
6. [QS]நான் உன்னை நினையாவிட்டால், [QE][QS2]எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் [QE][QS]நான் கருதாவிட்டால், [QE][QS2]என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. [QE][PBR]
7. [QS]யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே [QE][QS2]ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; [QE][QS]“அதை இடித்துப்போடுங்கள், [QE][QS2]அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே. [QE]
8. [QS]பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, [QE][QS2]நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக [QE][QS2]உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE]
9. [QS]உன் குழந்தைகளைப் பிடித்து, [QE][QS2]அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE]