1. [QS]யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
2. [QS]தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
3. [QS]கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
4. [QS]அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
5. [QS]அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
6. [QS]அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
7. [QS]அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
8. [QS]அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
9. [QS]இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
10. [QS]அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
11. [QS]அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
12. [QS]அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
13. [QS]செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
14. [QS]அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
15. [QS]ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
16. [QS]தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
17. [QS]அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
18. [QS]அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
19. [QS]அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
20. [QS]அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
21. [QS]அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
22. [QS]தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
23. [QS]அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
24. [QS]நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]
25. [QS]அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE][PBR]
26. [QS]பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; [QE][QRS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QRE]