1. [QS]யெகோவாவைத் துதியுங்கள்.[* எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21 ] [QE][PBR] [QS]யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; [QE][QS2]யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், [QE]
2. [QS]நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், [QE][QS2]யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள். [QE][PBR]
3. [QS]யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; [QE][QS2]அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. [QE]
4. [QS]ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; [QE][QS2]இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார். [QE][PBR]
5. [QS]யெகோவா பெரியவர் என்றும், [QE][QS2]நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், [QE][QS2]மேலானவர் என்பதையும் நான் அறிவேன். [QE]
6. [QS]வானத்திலும் பூமியிலும், [QE][QS2]கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் [QE][QS2]யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். [QE]
7. [QS]அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; [QE][QS2]மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், [QE][QS2]காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார். [QE][PBR]
8. [QS]அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், [QE][QS2]மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். [QE]
9. [QS]எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக [QE][QS2]அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. [QE]
10. [QS]அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், [QE][QS2]வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; [QE]
11. [QS]எமோரியரின் அரசன் சீகோனையும், [QE][QS2]பாசானின் அரசன் ஓகையும், [QE][QS2]கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், [QE]
12. [QS]அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, [QE][QS2]தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். [QE][PBR]
13. [QS]யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; [QE][QS2]யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். [QE]
14. [QS]யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, [QE][QS2]தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார். [QE][PBR]
15. [QS]பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், [QE][QS2]மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. [QE]
16. [QS]அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; [QE][QS2]அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QE]
17. [QS]அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, [QE][QS2]அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. [QE]
18. [QS]அவைகளைச் செய்கிறவர்களும், [QE][QS2]அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். [QE][PBR]
19. [QS]இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QE][QS2]ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QE]
20. [QS]லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QE][QS2]அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். [QE]
21. [QS]எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, [QE][QS2]சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். [QE][PBR] [QS]யெகோவாவைத் துதியுங்கள். [QE]