தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவைத் துதியுங்கள். [*எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21] யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; [QBR2] யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், [QBR]
2. நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், [QBR2] யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.
3. யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; [QBR2] அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. [QBR]
4. ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; [QBR2] இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார்.
5. யெகோவா பெரியவர் என்றும், [QBR2] நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், [QBR2] மேலானவர் என்பதையும் நான் அறிவேன். [QBR]
6. வானத்திலும் பூமியிலும், [QBR2] கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் [QBR2] யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். [QBR]
7. அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; [QBR2] மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், [QBR2] காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.
8. அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், [QBR2] மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். [QBR]
9. எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக [QBR2] அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. [QBR]
10. அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், [QBR2] வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; [QBR]
11. எமோரியரின் அரசன் சீகோனையும், [QBR2] பாசானின் அரசன் ஓகையும், [QBR2] கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், [QBR]
12. அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, [QBR2] தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
13. யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; [QBR2] யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். [QBR]
14. யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, [QBR2] தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.
15. பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், [QBR2] மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. [QBR]
16. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; [QBR2] அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. [QBR]
17. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, [QBR2] அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. [QBR]
18. அவைகளைச் செய்கிறவர்களும், [QBR2] அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
19. இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QBR2] ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QBR]
20. லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; [QBR2] அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். [QBR]
21. எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, [QBR2] சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 135 / 150
சங்கீதம் 135:61
1 யெகோவாவைத் துதியுங்கள். *எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21 யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், 2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள். 3 யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. 4 ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார். 5 யெகோவா பெரியவர் என்றும், நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், மேலானவர் என்பதையும் நான் அறிவேன். 6 வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். 7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார். 8 அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். 9 எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. 10 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; 11 எமோரியரின் அரசன் சீகோனையும், பாசானின் அரசன் ஓகையும், கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், 12 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். 13 யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். 14 யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார். 15 பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. 18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 19 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; 20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். 21 எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 135 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References