1. [QS]யெகோவாவே, தாவீதையும் [QE][QS2]அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும். [QE][PBR]
2. [QS]அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, [QE][QS2]யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: [QE]
3. [QS]“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், [QE][QS2]என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். [QE]
4. [QS]என் கண்களுக்கு நித்திரையையும், [QE][QS2]கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். [QE]
5. [QS]யெகோவாவுக்காக ஒரு இடத்தை, [QE][QS2]யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை [QE][QS2]இவற்றைச் செய்யமாட்டேன்.” [QE][PBR]
6. [QS]எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, [QE][QS2]யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: [QE]
7. [QS]“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், [QE][QS2]அவருடைய பாதபடியில் வழிபடுவோம். [QE]
8. [QS]‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், [QE][QS2]உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். [QE]
9. [QS]உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; [QE][QS2]உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ” [QE][PBR]
10. [QS]உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், [QE][QS2]நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். [QE][PBR]
11. [QS]யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; [QE][QS2]அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: [QE][QS]“உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை [QE][QS2]நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். [QE]
12. [QS]உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், [QE][QS2]நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், [QE][QS]அவர்களுடைய மகன்களும் [QE][QS2]என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.” [QE][PBR]
13. [QS]யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; [QE][QS2]அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: [QE]
14. [QS]“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; [QE][QS2]இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், [QE][QS2]இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். [QE]
15. [QS]நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; [QE][QS2]அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். [QE]
16. [QS]அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; [QE][QS2]அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். [QE][PBR]
17. [QS]“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; [QE][QS2]நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். [QE]
18. [QS]அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; [QE][QS2]ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.” [QE]