தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, தாவீதையும் [QBR2] அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
2. அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, [QBR2] யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: [QBR]
3. “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், [QBR2] என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். [QBR]
4. என் கண்களுக்கு நித்திரையையும், [QBR2] கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். [QBR]
5. யெகோவாவுக்காக ஒரு இடத்தை, [QBR2] யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை [QBR2] இவற்றைச் செய்யமாட்டேன்.”
6. எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, [QBR2] யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: [QBR]
7. “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், [QBR2] அவருடைய பாதபடியில் வழிபடுவோம். [QBR]
8. ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், [QBR2] உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். [QBR]
9. உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; [QBR2] உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
10. உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், [QBR2] நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
11. யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; [QBR2] அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: [QBR] “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை [QBR2] நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். [QBR]
12. உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், [QBR2] நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், [QBR] அவர்களுடைய மகன்களும் [QBR2] என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”
13. யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; [QBR2] அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: [QBR]
14. “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; [QBR2] இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், [QBR2] இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். [QBR]
15. நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; [QBR2] அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். [QBR]
16. அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; [QBR2] அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
17. “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; [QBR2] நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். [QBR]
18. அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; [QBR2] ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.” [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 132 / 150
சங்கீதம் 132:157
1 யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும். 2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: 3 “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். 4 என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். 5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை, யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை இவற்றைச் செய்யமாட்டேன்.” 6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: 7 “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம். 8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். 9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ” 10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். 11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். 12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், அவர்களுடைய மகன்களும் என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.” 13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: 14 “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். 15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். 16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். 17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். 18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 132 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References