1. [QS]யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? [QE][QS2]எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? [QE][QS2]நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்? [QE]
2. [QS]எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்? [QE][QS2]என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்? [QE][PBR]
3. [QS]என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். [QE][QS2]என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன். [QE]
4. [QS]அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; [QE][QS2]நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள். [QE][PBR]
5. [QS]ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; [QE][QS2]என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது. [QE]
6. [QS]யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், [QE][QS2]அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன். [QE]