தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று [QBR2] இஸ்ரயேலர் சொல்லட்டும்; [QBR]
2. “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், [QBR2] ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. [QBR]
3. உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, [QBR2] தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். [QBR]
4. ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; [QBR2] அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
5. சீயோனை வெறுக்கிற அனைவரும் [QBR2] வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். [QBR]
6. அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; [QBR2] அது வளரும் முன்பு வாடிப்போகுமே. [QBR]
7. அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; [QBR2] அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. [QBR]
8. வழிப்போக்கர்கள் அவர்களிடம், [QBR2] “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; [QBR] யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” [QBR2] என்றும் சொல்லாதிருக்கட்டும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
சங்கீதம் 129:1
1 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்; 2 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.” 5 சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். 6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே. 7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. 8 வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References