1. [QS]யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் [QE][QS2]அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]
2. [QS]உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; [QE][QS2]ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். [QE]
3. [QS]உன் மனைவி உன் வீட்டிற்குள் [QE][QS2]கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; [QE][QS]ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், [QE][QS2]உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். [QE]
4. [QS]ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் [QE][QS2]இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான். [QE][PBR]
5. [QS]யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; [QE][QS2]உன் வாழ்நாட்களெல்லாம் [QE][QS2]எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. [QE]
6. [QS]நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; [QE][QS2]இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக. [QE]