1. [QS]நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, [QE][QS2]நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QE]
2. [QS]எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், [QE][QS2]எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. [QE][QS]அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” [QE][QS2]என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. [QE]
3. [QS]யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QE][QS2]அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம். [QE][PBR]
4. [QS]யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, [QE][QS2]எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். [QE]
5. [QS]கண்ணீருடன் விதைக்கிறவர்கள், [QE][QS2]மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். [QE]
6. [QS]விதைப்பதற்கான விதைகளை [QE][QS2]அழுதுகொண்டு சுமந்து போகிறவன், [QE][QS]மகிழ்ச்சியின் பாடல்களுடன் [QE][QS2]கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான். [QE]