1. யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் [QBR2] என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். [QBR]
2. மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், [QBR2] யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் [QBR2] தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
3. நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், [QBR2] கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; [QBR] இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் [QBR2] தங்கள் கைகளை நீட்டலாம்.
4. யெகோவாவே, நல்லவர்களுக்கு, [QBR2] இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும். [QBR]
5. குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, [QBR2] யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக. [PE]