தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]“யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” [QE][QS2]என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். [QE]
2. [QS]எருசலேமே, எங்கள் கால்கள் [QE][QS2]உன் வாசல்களில் நிற்கின்றன. [QE][PBR]
3. [QS]நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், [QE][QS2]எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. [QE]
4. [QS]யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, [QE][QS2]கோத்திரங்கள் அங்கு போவார்கள்; [QE][QS]இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, [QE][QS2]யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். [QE]
5. [QS]தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; [QE][QS2]அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். [QE][PBR]
6. [QS]எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: [QE][QS2]“உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். [QE]
7. [QS]உன் மதில்களுக்குள் சமாதானமும், [QE][QS2]உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” [QE]
8. [QS]என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் [QE][QS2]“உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். [QE]
9. [QS]எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், [QE][QS2]நான் உன் செழிப்பைத் தேடுவேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
1 “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். 2 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன. 3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. 4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். 5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். 6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். 7 உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” 8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். 9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References