தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]அவர் எனக்குப் பதிலளிக்கிறார். [QE]
2. [QS]யெகோவாவே, [QE][QS2]பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், [QE][QS2]வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். [QE][PBR]
3. [QS]வஞ்சக நாவே, [QE][QS2]இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? [QE][QS2]அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? [QE]
4. [QS]போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், [QE][QS2]சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். [QE][PBR]
5. [QS]ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே [QE][QS2]வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; [QE][QS2]கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! [QE]
6. [QS]சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் [QE][QS2]நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. [QE]
7. [QS]நான் சமாதானத்தை நாடுகிறேன்; [QE][QS2]அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார். 2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். 3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References