1. [QS]யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; [QE][QS2]மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள். [QE]
2. [QS]ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; [QE][QS2]அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி [QE][QS2]இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள். [QE][PBR]
3. [QS]முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் [QE][QS2]பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. [QE]
4. [QS]“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; [QE][QS2]எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” [QE][QS2]என்று அவர்கள் சொல்லுகிறார்கள். [QE][PBR]
5. [QS]“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். [QE][QS2]இதினால் நான் இப்பொழுது எழுந்து, [QE][QS2]அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். [QE]
6. [QS]யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. [QE][QS2]அவை களிமண் உலையில் [QE][QS2]ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன. [QE][PBR]
7. [QS]யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; [QE][QS2]கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர். [QE]
8. [QS]இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் [QE][QS2]கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள். [QE]