தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; [QBR2] மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள். [QBR]
2. ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; [QBR2] அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி [QBR2] இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
3. முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் [QBR2] பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. [QBR]
4. “எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; [QBR2] எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” [QBR2] என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
5. “ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். [QBR2] இதினால் நான் இப்பொழுது எழுந்து, [QBR2] அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். [QBR]
6. யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. [QBR2] அவை களிமண் உலையில் [QBR2] ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.
7. யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; [QBR2] கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர். [QBR]
8. இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் [QBR2] கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
சங்கீதம் 12:33
1 யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள். 2 ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள். 3 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. 4 “எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். 5 “ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். 6 யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன. 7 யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர். 8 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References