1. குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, [QBR2] யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
2. அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, [QBR2] தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
3. அவர்கள் தவறு செய்யாமல் [QBR2] அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். [QBR]
4. நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே [QBR2] நீர் அவைகளைக் கொடுத்தீர். [QBR]
5. ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, [QBR2] என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். [QBR]
6. உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, [QBR2] நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். [QBR]
7. உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, [QBR2] நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். [QBR]
8. நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; [QBR2] என்னை முற்றிலும் கைவிடாதேயும். ב பேத் [QBR]
9. வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? [QBR2] உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. [QBR]
10. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; [QBR2] உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். [QBR]
11. நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, [QBR2] உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். [QBR]
12. யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; [QBR2] உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். [QBR]
13. உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் [QBR2] என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். [QBR]
14. ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், [QBR2] நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். [QBR]
15. நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, [QBR2] உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். [QBR]
16. நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; [QBR2] உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். ג கிமெல் [QBR]
17. உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; [QBR2] அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். [QBR]
18. உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, [QBR2] என் கண்களைத் திறந்தருளும். [QBR]
19. பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; [QBR2] உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். [QBR]
20. உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், [QBR2] என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. [QBR]
21. அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; [QBR2] அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். [QBR]
22. நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், [QBR2] பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். [QBR]
23. ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், [QBR2] உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். [QBR]
24. உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; [QBR2] அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன. ד டாலெத் [QBR]
25. நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; [QBR2] உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். [QBR]
26. நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், [QBR2] நீர் எனக்குப் பதிலளித்தீர்; [QBR2] உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். [QBR]
27. உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; [QBR2] அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் [*போதனைகளை அல்லது செயல்களை] தியானிப்பேன். [QBR]
28. என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; [QBR2] உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும். [QBR]
29. என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; [QBR2] என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். [QBR]
30. மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; [QBR2] நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன். [QBR]
31. யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; [QBR2] என்னை வெட்கப்பட விடாதேயும். [QBR]
32. நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், [QBR2] உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன். ה ஹெ [QBR]
33. யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; [QBR2] அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன். [QBR]
34. விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; [QBR2] அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். [QBR2] என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன். [QBR]
35. உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; [QBR2] ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். [QBR]
36. என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், [QBR2] உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும். [QBR]
37. பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; [QBR2] உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். [QBR]
38. உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை [QBR2] உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும். [QBR]
39. நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; [QBR2] ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை. [QBR]
40. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! [QBR2] உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். ו வெள [QBR]
41. யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், [QBR2] உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக; [QBR]
42. அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; [QBR2] ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன். [QBR]
43. சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; [QBR2] ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். [QBR]
44. நான் எப்பொழுதும் [QBR2] உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். [QBR]
45. உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், [QBR2] நான் சுதந்திரமாக நடந்துவருவேன். [QBR]
46. நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; [QBR2] நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன். [QBR]
47. ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், [QBR2] அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன். [QBR]
48. நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; [QBR2] உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன். ז சயின் [QBR]
49. உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; [QBR2] அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர். [QBR]
50. இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: [QBR2] உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது. [QBR]
51. அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; [QBR2] ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை. [QBR]
52. யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; [QBR2] நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன். [QBR]
53. உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், [QBR2] கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது. [QBR]
54. நான் எங்கு தங்கினாலும், [QBR2] உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று. [QBR]
55. யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, [QBR2] உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். [QBR]
56. உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே [QBR2] என் வழக்கமாயிற்று. ח கேத் [QBR]
57. யெகோவாவே, நீரே என் பங்கு; [QBR2] உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன். [QBR]
58. நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; [QBR2] உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும். [QBR]
59. நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, [QBR2] உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். [QBR]
60. உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், [QBR2] தாமதிக்கமாட்டேன். [QBR]
61. கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், [QBR2] நான் உமது சட்டத்தை மறவேன். [QBR]
62. உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, [QBR2] நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன். [QBR]
63. உமக்குப் பயந்து நடக்கிற, [QBR2] உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன். [QBR]
64. யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; [QBR2] உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். ט தேத் [QBR]
65. யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி [QBR2] உமது அடியேனுக்கு நன்மை செய்யும். [QBR]
66. உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், [QBR2] அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும். [QBR]
67. நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், [QBR2] ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். [QBR]
68. நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; [QBR2] உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும். [QBR]
69. அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், [QBR2] ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன். [QBR]
70. அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; [QBR2] நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன். [QBR]
71. நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; [QBR2] அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன். [QBR]
72. ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், [QBR2] உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது. י யோத் [QBR]
73. உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; [QBR2] உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். [QBR]
74. நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், [QBR2] உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக. [QBR]
75. யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; [QBR2] நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான். [QBR]
76. நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, [QBR2] உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக. [QBR]
77. நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; [QBR2] உமது சட்டம் என் மனமகிழ்ச்சி. [QBR]
78. காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் [QBR2] அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; [QBR2] நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன். [QBR]
79. உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, [QBR2] உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும். [QBR]
80. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் [QBR2] உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும். כ காஃப் [QBR]
81. உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; [QBR2] நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். [QBR]
82. உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; [QBR2] “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன். [QBR]
83. நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் [QBR2] திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், [QBR2] உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன். [QBR]
84. உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? [QBR2] என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்? [QBR]
85. அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; [QBR2] அது உமது சட்டத்திற்கு முரணானது. [QBR]
86. உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; [QBR2] காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும். [QBR]
87. அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; [QBR2] ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை. [QBR]
88. உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும் [†காத்துக்கொள்ளும் அல்லது உயிர்வாழச் செய்யும்.] , [QBR2] அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன். ל லாமேத் [QBR]
89. யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; [QBR2] அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. [QBR]
90. உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; [QBR2] நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. [QBR]
91. உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; [QBR2] ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. [QBR]
92. உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், [QBR2] நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். [QBR]
93. நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; [QBR2] ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். [QBR]
94. நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; [QBR2] நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். [QBR]
95. கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; [QBR2] ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். [QBR]
96. பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; [QBR2] ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. מ மேம் [QBR]
97. ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! [QBR2] நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். [QBR]
98. உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், [QBR2] அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. [QBR]
99. நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், [QBR2] எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். [QBR]
100. நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், [QBR2] முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். [QBR]
101. உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, [QBR2] எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; [QBR]
102. நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; [QBR2] ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். [QBR]
103. உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! [QBR2] என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. [QBR]
104. உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; [QBR2] ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். נ நூன் [QBR]
105. உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் [QBR2] என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. [QBR]
106. உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று [QBR2] நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; [QBR2] அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். [QBR]
107. நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; [QBR2] யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். [QBR]
108. யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; [QBR2] உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். [QBR]
109. என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், [QBR2] உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். [QBR]
110. கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; [QBR2] ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. [QBR]
111. உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; [QBR2] அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. [QBR]
112. உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள [QBR2] என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. ס சாமெக் [QBR]
113. இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். [QBR2] நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன். [QBR]
114. நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; [QBR2] உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். [QBR]
115. அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், [QBR2] நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்! [QBR]
116. உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; [QBR2] அப்பொழுது நான் வாழ்வடைவேன்; [QBR2] என் நம்பிக்கை வீண்போக விடாதேயும். [QBR]
117. என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; [QBR2] நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன். [QBR]
118. உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற [QBR2] எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். [QBR2] அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது. [QBR]
119. பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; [QBR2] ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன். [QBR]
120. உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; [QBR2] நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். ע அயின் [QBR]
121. நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; [QBR2] என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும். [QBR]
122. உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; [QBR2] அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும். [QBR]
123. உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், [QBR2] உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, [QBR2] என் கண்கள் மங்கிப்போகின்றன. [QBR]
124. உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, [QBR2] உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். [QBR]
125. நான் உமது பணியாளன்; [QBR2] உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும். [QBR]
126. யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; [QBR2] உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது. [QBR]
127. உமது கட்டளைகளை தங்கத்தைவிட, [QBR2] சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும், [QBR]
128. உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், [QBR2] நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன். פ பெ [QBR]
129. உமது நியமங்கள் ஆச்சரியமானவை, [QBR2] ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். [QBR]
130. உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; [QBR2] அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன. [QBR]
131. நான் உமது கட்டளைகளை விரும்பி, [QBR2] என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன். [QBR]
132. உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, [QBR2] என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும். [QBR]
133. உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, [QBR2] ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும். [QBR]
134. மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; [QBR2] அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன். [QBR]
135. உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; [QBR2] உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். [QBR]
136. மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், [QBR2] எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. צ த்சாதெ [QBR]
137. யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; [QBR2] உமது சட்டங்கள் நியாயமானவை. [QBR]
138. நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; [QBR2] அவை முற்றும் நம்பத்தகுந்தவை. [QBR]
139. என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், [QBR2] எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது. [QBR]
140. உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; [QBR2] உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன். [QBR]
141. நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், [QBR2] உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன். [QBR]
142. உமது நீதி நித்தியமானது, [QBR2] உமது சட்டம் உண்மையானது. [QBR]
143. கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; [QBR2] ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன. [QBR]
144. உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; [QBR2] அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன். ק கோஃப் [QBR]
145. யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; [QBR2] எனக்குப் பதில் தாரும், [QBR2] நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன். [QBR]
146. நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; [QBR2] நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன். [QBR]
147. விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; [QBR2] உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். [QBR]
148. உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, [QBR2] இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன. [QBR]
149. நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; [QBR2] யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். [QBR]
150. கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; [QBR2] ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள். [QBR]
151. என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; [QBR2] உமது கட்டளைகள் எல்லாம் உண்மை. [QBR]
152. உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை [QBR2] வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன். ר ரேஷ் [QBR]
153. என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; [QBR2] ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை. [QBR]
154. எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; [QBR2] உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். [QBR]
155. இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், [QBR2] அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை. [QBR]
156. யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; [QBR2] உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். [QBR]
157. என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; [QBR2] ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை. [QBR]
158. துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; [QBR2] ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை. [QBR]
159. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; [QBR2] யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். [QBR]
160. உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; [QBR2] நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. ש ஷீன் [QBR]
161. ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; [QBR2] ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது. [QBR]
162. பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், [QBR2] உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். [QBR]
163. நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; [QBR2] ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன். [QBR]
164. நீதியான உமது சட்டங்களுக்காக [QBR2] நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். [QBR]
165. உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; [QBR2] அவர்களுக்கு இடறலில்லை. [QBR]
166. யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; [QBR2] உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். [QBR]
167. நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; [QBR2] ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன். [QBR]
168. நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; [QBR2] எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன. ת தெள [QBR]
169. யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; [QBR2] உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும். [QBR]
170. என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; [QBR2] உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும். [QBR]
171. எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; [QBR2] ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர். [QBR]
172. எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; [QBR2] ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை. [QBR]
173. உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; [QBR2] ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். [QBR]
174. யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; [QBR2] உமது சட்டம் எனது மகிழ்ச்சி. [QBR]
175. நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; [QBR2] உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக. [QBR]
176. காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; [QBR2] உமது அடியேனைத் தேடுவீராக; [QBR2] ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை. [PE]