தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; [QBR2] அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
2. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று [QBR2] இஸ்ரயேலர் சொல்வார்களாக. [QBR]
3. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று [QBR2] ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக. [QBR]
4. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று [QBR2] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
5. நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, [QBR2] விசாலமான இடத்தில் என்னை நடத்தினார். [QBR]
6. யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; [QBR2] மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? [QBR]
7. யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; [QBR2] என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
8. மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், [QBR2] யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது. [QBR]
9. அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், [QBR2] யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது. [QBR]
10. எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; [QBR2] ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன். [QBR]
11. அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; [QBR2] ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன். [QBR]
12. அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; [QBR2] ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; [QBR2] யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன். [QBR]
13. நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; [QBR2] ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். [QBR]
14. யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; [QBR2] அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
15. நீதிமான்களின் கூடாரங்களில், [QBR2] வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: [QBR] “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது. [QBR2]
16. யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; [QBR2] யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.” [QBR]
17. நான் வாழுவேன், சாகமாட்டேன். [QBR2] நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன். [QBR]
18. யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், [QBR2] ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை. [QBR]
19. நீதியின் வாசல்களை [*நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல்.] எனக்காகத் திறவுங்கள்; [QBR2] நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன். [QBR]
20. இதுவே யெகோவாவின் வாசல்; [QBR2] நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள். [QBR]
21. நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; [QBR2] என் இரட்சிப்பு நீரே.
22. வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே [QBR2] மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. [QBR]
23. யெகோவாவே இதைச் செய்தார், [QBR2] இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. [QBR]
24. யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; [QBR2] இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
25. யெகோவாவே, எங்களை இரட்சியும்; [QBR2] யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
26. யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; [QBR2] யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். [QBR]
27. யெகோவாவே இறைவன், [QBR2] அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; [QBR] பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, [QBR2] பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி [QBR2] ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
28. நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; [QBR2] நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
29. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; [QBR2] அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 118 / 150
சங்கீதம் 118:144
1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. 2 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இஸ்ரயேலர் சொல்வார்களாக. 3 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக. 4 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக. 5 நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார். 6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 7 யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன். 8 மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது. 9 அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது. 10 எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன். 11 அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன். 12 அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன். 13 நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். 14 யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; அவரே எனக்கு இரட்சிப்புமானார். 15 நீதிமான்களின் கூடாரங்களில், வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது. 16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.” 17 நான் வாழுவேன், சாகமாட்டேன். நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன். 18 யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 19 நீதியின் வாசல்களை *நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்; நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன். 20 இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள். 21 நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; என் இரட்சிப்பு நீரே. 22 வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. 23 யெகோவாவே இதைச் செய்தார், இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 24 யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம். 25 யெகோவாவே, எங்களை இரட்சியும்; யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும். 26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். 27 யெகோவாவே இறைவன், அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள். 28 நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன். 29 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 118 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References