1. [QS]நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; [QE][QS2]இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார். [QE]
2. [QS]அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், [QE][QS2]நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன். [QE][PBR]
3. [QS]மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; [QE][QS2]பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; [QE][QS2]கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. [QE]
4. [QS]அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: [QE][QS2]“யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!” [QE][PBR]
5. [QS]யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; [QE][QS2]நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர். [QE]
6. [QS]யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; [QE][QS2]நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார். [QE][PBR]
7. [QS]என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; [QE][QS2]யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார். [QE][PBR]
8. [QS]யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; [QE][QS2]என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், [QE][QS2]என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர். [QE]
9. [QS]நான் உயிருள்ளோரின் நாட்டிலே [QE][QS2]யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன். [QE][PBR]
10. [QS]“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், [QE][QS2]நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன். [QE]
11. [QS]ஆனாலும் என் மனச்சோர்வினாலே, [QE][QS2]“எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன். [QE][PBR]
12. [QS]யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, [QE][QS2]நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்? [QE][PBR]
13. [QS]நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு[* என்னை விடுவித்த யெகோவாவுக்கு பானபலி செலுத்துவேன். ] [QE][QS2]யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். [QE]
14. [QS]நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை [QE][QS2]அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன். [QE][PBR]
15. [QS]யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் [QE][QS2]அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது. [QE]
16. [QS]யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; [QE][QS2]நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; [QE][QS2]என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர். [QE][PBR]
17. [QS]நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, [QE][QS2]யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். [QE]
18. [QS]நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, [QE][QS2]அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன். [QE]
19. [QS]எருசலேமே உன் நடுவில் [QE][QS2]யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். [QE][PBR] [QS]அல்லேலூயா. [QE]