1. நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; [QBR2] இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார். [QBR]
2. அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், [QBR2] நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.
3. மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; [QBR2] பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; [QBR2] கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. [QBR]
4. அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: [QBR2] “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”
5. யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; [QBR2] நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர். [QBR]
6. யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; [QBR2] நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார்.
7. என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; [QBR2] யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.
8. யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; [QBR2] என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், [QBR2] என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர். [QBR]
9. நான் உயிருள்ளோரின் நாட்டிலே [QBR2] யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன்.
10. “நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், [QBR2] நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன். [QBR]
11. ஆனாலும் என் மனச்சோர்வினாலே, [QBR2] “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.
12. யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, [QBR2] நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?
13. நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு [*என்னை விடுவித்த யெகோவாவுக்கு பானபலி செலுத்துவேன்.] [QBR2] யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். [QBR]
14. நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை [QBR2] அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.
15. யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் [QBR2] அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது. [QBR]
16. யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; [QBR2] நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; [QBR2] என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர்.
17. நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, [QBR2] யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். [QBR]
18. நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, [QBR2] அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன். [QBR]
19. எருசலேமே உன் நடுவில் [QBR2] யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். அல்லேலூயா. [PE]