1. [QS]இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, [QE][QS2]யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது, [QE]
2. [QS]யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; [QE][QS2]இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று. [QE][PBR]
3. [QS]கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; [QE][QS2]யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது. [QE]
4. [QS]மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், [QE][QS2]குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின. [QE][PBR]
5. [QS]கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? [QE][QS2]யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்? [QE]
6. [QS]மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், [QE][QS2]குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்? [QE][PBR]
7. [QS]பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, [QE][QS2]யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு. [QE]
8. [QS]அவர் கற்பாறையைக் குளமாகவும், [QE][QS2]கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே. [QE]