தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; [QBR2] யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். [QBR]
2. யெகோவாவின் பெயர் இப்பொழுதும், [QBR2] எப்பொழுதும் துதிக்கப்படட்டும். [QBR]
3. சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை [QBR2] யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4. யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; [QBR2] அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. [QBR]
5. நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? [QBR2] உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? [QBR]
6. வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி [QBR2] தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
7. அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், [QBR2] எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். [QBR]
8. அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். [QBR]
9. அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, [QBR2] அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
சங்கீதம் 113:73
1 அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். 2 யெகோவாவின் பெயர் இப்பொழுதும், எப்பொழுதும் துதிக்கப்படட்டும். 3 சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும். 4 யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. 5 நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? 6 வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு? 7 அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். 8 அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். 9 அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References