1. அல்லேலூயா, யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; [QBR2] யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். [QBR]
2. யெகோவாவின் பெயர் இப்பொழுதும், [QBR2] எப்பொழுதும் துதிக்கப்படட்டும். [QBR]
3. சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை [QBR2] யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4. யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; [QBR2] அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. [QBR]
5. நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? [QBR2] உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? [QBR]
6. வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி [QBR2] தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
7. அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், [QBR2] எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். [QBR]
8. அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். [QBR]
9. அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, [QBR2] அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா. [PE]