தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், [QBR2] அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2. அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; [QBR2] நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். [QBR]
3. செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; [QBR2] அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. [QBR]
4. நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; [QBR2] ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். [QBR]
5. தாராள மனதுடன் கடன்கொடுத்து, [QBR2] தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
6. நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; [QBR2] நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். [QBR]
7. துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; [QBR2] அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. [QBR]
8. அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; [QBR2] கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். [QBR]
9. அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; [QBR2] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; [QBR2] அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
10. கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; [QBR2] அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; [QBR2] கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 112 / 150
சங்கீதம் 112:82
1 அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். 2 அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 3 செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. 4 நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். 5 தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும். 6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். 7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. 8 அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். 9 அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான். 10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 112 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References