1. [QS]அல்லேலூயா. [QE][PBR] [QS]யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், [QE][QS2]அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE][PBR]
2. [QS]அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; [QE][QS2]நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். [QE]
3. [QS]செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; [QE][QS2]அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. [QE]
4. [QS]நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; [QE][QS2]ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். [QE]
5. [QS]தாராள மனதுடன் கடன்கொடுத்து, [QE][QS2]தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும். [QE][PBR]
6. [QS]நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; [QE][QS2]நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். [QE]
7. [QS]துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; [QE][QS2]அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. [QE]
8. [QS]அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; [QE][QS2]கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். [QE]
9. [QS]அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; [QE][QS2]அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; [QE][QS2]அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான். [QE][PBR]
10. [QS]கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; [QE][QS2]அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; [QE][QS2]கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும். [QE]