1. [QS]அல்லேலூயா, [QE][PBR] [QS]நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் [QE][QS2]நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன். [QE][PBR]
2. [QS]யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; [QE][QS2]அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. [QE]
3. [QS]அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; [QE][QS2]அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. [QE]
4. [QS]அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; [QE][QS2]யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். [QE]
5. [QS]அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; [QE][QS2]அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார். [QE][PBR]
6. [QS]அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, [QE][QS2]தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். [QE]
7. [QS]அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; [QE][QS2]அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. [QE]
8. [QS]அவை என்றென்றும் உறுதியானவை; [QE][QS2]உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. [QE]
9. [QS]அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; [QE][QS2]அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; [QE][QS2]பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது. [QE][PBR]
10. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS2]அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. [QE][QS2]நித்தியமான துதி அவருக்கே உரியது. [QE]