தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் [QBR2] நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
2. யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; [QBR2] அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. [QBR]
3. அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; [QBR2] அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. [QBR]
4. அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; [QBR2] யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். [QBR]
5. அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; [QBR2] அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
6. அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, [QBR2] தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். [QBR]
7. அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; [QBR2] அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. [QBR]
8. அவை என்றென்றும் உறுதியானவை; [QBR2] உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. [QBR]
9. அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; [QBR2] அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; [QBR2] பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
10. யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QBR2] அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. [QBR2] நித்தியமான துதி அவருக்கே உரியது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
சங்கீதம் 111:15
1 அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன். 2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. 3 அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. 4 அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். 5 அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார். 6 அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். 7 அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. 8 அவை என்றென்றும் உறுதியானவை; உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. 9 அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது. 10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References