1. யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை [QBR2] உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை [QBR2] நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
2. யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; [QBR2] “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!” [QBR]
3. உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், [QBR2] தாங்களாகவே முன்வருவார்கள்; [QBR] அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் [QBR2] உமது வாலிபர்கள் [QBR2] பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
4. “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, [QBR2] நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” [*எபி. 5:6] [QBR] என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; [QBR2] அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
5. யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; [QBR2] அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார். [QBR]
6. அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; [QBR2] இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார். [QBR]
7. வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; [QBR2] ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார். [PE]