1. [QS]நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். [QE][QS2]அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: [QE][QS2]“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. [QE]
2. [QS]பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; [QE][QS2]நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் [QE][QS]இருளிலிருந்து எய்வதற்காக [QE][QS2]தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். [QE]
3. [QS]அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, [QE][QS2]நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?” [QE][PBR]
4. [QS]யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; [QE][QS2]யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். [QE][QS]அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; [QE][QS2]அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. [QE]
5. [QS]யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; [QE][QS2]வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, [QE][QS2]அவர் மனதார வெறுக்கிறார். [QE]
6. [QS]அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், [QE][QS2]எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; [QE][QS2]வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும். [QE][PBR]
7. [QS]யெகோவா நீதியுள்ளவர், [QE][QS2]அவர் நீதியை நேசிக்கிறார்; [QE][QS2]நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள். [QE]