1. [QS]இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, [QE][QS2]நீர் மவுனமாய் இருக்கவேண்டாம். [QE]
2. [QS]கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், [QE][QS2]தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; [QE][QS2]பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். [QE]
3. [QS]அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; [QE][QS2]காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள். [QE]
4. [QS]அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், [QE][QS2]நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன். [QE]
5. [QS]அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; [QE][QS2]என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள். [QE][PBR]
6. [QS]என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; [QE][QS2]அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக. [QE]
7. [QS]அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; [QE][QS2]அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக. [QE]
8. [QS]அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; [QE][QS2]அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக. [QE]
9. [QS]அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், [QE][QS2]அவன் மனைவி விதவையாகட்டும். [QE]
10. [QS]அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; [QE][QS2]அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக. [QE]
11. [QS]கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; [QE][QS2]அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக. [QE]
12. [QS]ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், [QE][QS2]அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக. [QE]
13. [QS]அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; [QE][QS2]அவன்[* அவன் அல்லது அவர்களுடைய ] பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக. [QE]
14. [QS]அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; [QE][QS2]அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக. [QE]
15. [QS]ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே [QE][QS2]யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; [QE][QS2]அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும். [QE][PBR]
16. [QS]ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; [QE][QS2]மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், [QE][QS2]உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான். [QE]
17. [QS]சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; [QE][QS2]அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; [QE][QS]ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, [QE][QS2]ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக. [QE]
18. [QS]அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; [QE][QS2]அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், [QE][QS2]அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது. [QE]
19. [QS]சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; [QE][QS2]அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக. [QE]
20. [QS]என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், [QE][QS2]என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் [QE][QS2]இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக. [QE][PBR]
21. [QS]ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, [QE][QS2]நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; [QE][QS2]உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும். [QE]
22. [QS]ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், [QE][QS2]என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது. [QE]
23. [QS]நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; [QE][QS2]ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன். [QE]
24. [QS]உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; [QE][QS2]என் உடல் மெலிந்து போயிருக்கிறது. [QE]
25. [QS]என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; [QE][QS2]அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள். [QE][PBR]
26. [QS]யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; [QE][QS2]உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும். [QE]
27. [QS]யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், [QE][QS2]நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும். [QE]
28. [QS]அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; [QE][QS2]அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; [QE][QS2]ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன். [QE]
29. [QS]என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; [QE][QS2]ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள். [QE][PBR]
30. [QS]நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; [QE][QS2]பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன். [QE]
31. [QS]ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; [QE][QS2]அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து [QE][QS2]அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார். [QE]