தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, [QBR2] நீர் மவுனமாய் இருக்கவேண்டாம். [QBR]
2. கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், [QBR2] தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; [QBR2] பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். [QBR]
3. அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; [QBR2] காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள். [QBR]
4. அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், [QBR2] நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன். [QBR]
5. அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; [QBR2] என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.
6. என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; [QBR2] அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக. [QBR]
7. அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; [QBR2] அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக. [QBR]
8. அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; [QBR2] அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக. [QBR]
9. அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், [QBR2] அவன் மனைவி விதவையாகட்டும். [QBR]
10. அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; [QBR2] அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக. [QBR]
11. கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; [QBR2] அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக. [QBR]
12. ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், [QBR2] அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக. [QBR]
13. அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; [QBR2] அவன் [*அவன் அல்லது அவர்களுடைய] பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக. [QBR]
14. அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; [QBR2] அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக. [QBR]
15. ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே [QBR2] யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; [QBR2] அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.
16. ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; [QBR2] மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், [QBR2] உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான். [QBR]
17. சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; [QBR2] அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; [QBR] ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, [QBR2] ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக. [QBR]
18. அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; [QBR2] அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், [QBR2] அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது. [QBR]
19. சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; [QBR2] அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக. [QBR]
20. என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், [QBR2] என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் [QBR2] இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.
21. ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, [QBR2] நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; [QBR2] உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும். [QBR]
22. ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், [QBR2] என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது. [QBR]
23. நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; [QBR2] ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன். [QBR]
24. உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; [QBR2] என் உடல் மெலிந்து போயிருக்கிறது. [QBR]
25. என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; [QBR2] அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.
26. யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; [QBR2] உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும். [QBR]
27. யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், [QBR2] நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும். [QBR]
28. அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; [QBR2] அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; [QBR2] ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன். [QBR]
29. என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; [QBR2] ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.
30. நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; [QBR2] பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன். [QBR]
31. ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; [QBR2] அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து [QBR2] அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 109 / 150
சங்கீதம் 109:19
1 இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, நீர் மவுனமாய் இருக்கவேண்டாம். 2 கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். 3 அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள். 4 அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன். 5 அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள். 6 என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக. 7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக. 8 அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக. 9 அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், அவன் மனைவி விதவையாகட்டும். 10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக. 11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக. 12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக. 13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; அவன் *அவன் அல்லது அவர்களுடைய பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக. 14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக. 15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும். 16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான். 17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக. 18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது. 19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக. 20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக. 21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும். 22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது. 23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன். 24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; என் உடல் மெலிந்து போயிருக்கிறது. 25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள். 26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும். 27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும். 28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன். 29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள். 30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன். 31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 109 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References