தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; [QBR2] நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன். [QBR]
2. யாழே, வீணையே, விழித்தெழுங்கள், [QBR2] நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன். [QBR]
3. யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QBR2] மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். [QBR]
4. ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, [QBR2] அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; [QBR2] உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. [QBR]
5. இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QBR2] உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
6. நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, [QBR2] உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். [QBR]
7. இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: [QBR2] “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; [QBR2] சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். [QBR]
8. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QBR2] எப்பிராயீம் என் தலைக்கவசம், [QBR2] யூதா என் செங்கோல். [QBR]
9. மோவாப் என் கழுவும் பாத்திரம், [QBR2] நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; [QBR2] நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
10. அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? [QBR2] யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? [QBR]
11. இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், [QBR2] எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? [QBR]
12. பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; [QBR2] ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. [QBR]
13. இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; [QBR2] அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 108 / 150
சங்கீதம் 108:81
1 இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன். 2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன். 3 யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். 4 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. 5 இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும். 6 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். 7 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல். 9 மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” 10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? 11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? 12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. 13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 108 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References