1. [QS]இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; [QE][QS2]நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன். [QE]
2. [QS]யாழே, வீணையே, விழித்தெழுங்கள், [QE][QS2]நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன். [QE]
3. [QS]யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QE][QS2]மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். [QE]
4. [QS]ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, [QE][QS2]அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; [QE][QS2]உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. [QE]
5. [QS]இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QE][QS2]உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும். [QE][PBR]
6. [QS]நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, [QE][QS2]உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். [QE]
7. [QS]இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: [QE][QS2]“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; [QE][QS2]சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். [QE]
8. [QS]கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QE][QS2]எப்பிராயீம் என் தலைக்கவசம், [QE][QS2]யூதா என் செங்கோல். [QE]
9. [QS]மோவாப் என் கழுவும் பாத்திரம், [QE][QS2]நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; [QE][QS2]நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” [QE][PBR]
10. [QS]அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? [QE][QS2]யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? [QE]
11. [QS]இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், [QE][QS2]எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? [QE]
12. [QS]பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; [QE][QS2]ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. [QE]
13. [QS]இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; [QE][QS2]அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். [QE]