1. [QS]யெகோவாவைத் துதியுங்கள்[* துதியுங்கள் என்பது எபிரெய மொழியில் அல்லேலூயா எனப்படும். ]. [QE][PBR] [QS]யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; [QE][QS2]அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. [QE][PBR]
2. [QS]யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும், [QE][QS2]அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்? [QE]
3. [QS]நியாயமாய் செயல்படுகிறவர்கள், [QE][QS2]எப்பொழுதும் நீதியானதைச் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE][PBR]
4. [QS]யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது, [QE][QS2]என்னையும் நினைவில்கொள்ளும், [QE][QS2]நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும். [QE]
5. [QS]அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை [QE][QS2]அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன். [QE][QS]உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்; [QE][QS2]உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன். [QE][PBR]
6. [QS]எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம், [QE][QS2]நாங்கள் அநியாயம் செய்து, கொடுமையாய் நடந்தோம். [QE]
7. [QS]எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது, [QE][QS2]அவர்கள் உமது அற்புதங்களைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை; [QE][QS]அவர்கள் உம்முடைய உடன்படிக்கையின் அன்பின் கிரியைகளையும் நினைவில்கொள்ளவில்லை; [QE][QS2]கடலின், செங்கடலின் ஓரத்திலே அவர்கள் கலகம் செய்தார்கள். [QE]
8. [QS]ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி, [QE][QS2]தமது பெயரின் நிமித்தம் அவர்களைக் இரட்சித்தார். [QE]
9. [QS]அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று; [QE][QS2]அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார். [QE]
10. [QS]அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்; [QE][QS2]பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார். [QE]
11. [QS]அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது; [QE][QS2]அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை. [QE]
12. [QS]அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, [QE][QS2]அவருடைய துதியைப் பாடினார்கள். [QE][PBR]
13. [QS]ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; [QE][QS2]அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை. [QE]
14. [QS]பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; [QE][QS2]பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். [QE]
15. [QS]எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; [QE][QS2]ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார். [QE][PBR]
16. [QS]அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும், [QE][QS2]யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள். [QE]
17. [QS]பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது; [QE][QS2]அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது. [QE]
18. [QS]அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; [QE][QS2]கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது. [QE]
19. [QS]அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, [QE][QS2]உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள். [QE]
20. [QS]அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, [QE][QS2]புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள். [QE]
21. [QS]எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து, [QE][QS2]தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள். [QE]
22. [QS]காமின் நாட்டிலே அற்புதங்களையும், [QE][QS2]செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள். [QE]
23. [QS]ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்; [QE][QS2]யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, [QE][QS]யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று [QE][QS2]அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான். [QE][PBR]
24. [QS]அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்; [QE][QS2]அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை. [QE]
25. [QS]தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, [QE][QS2]யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள். [QE]
26. [QS]ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி [QE][QS2]தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார். [QE]
27. [QS]அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து, [QE][QS2]அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார். [QE][PBR]
28. [QS]அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு, [QE][QS2]உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள். [QE]
29. [QS]இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால் [QE][QS2]யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; [QE][QS2]அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது. [QE]
30. [QS]ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால், [QE][QS2]அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது. [QE]
31. [QS]அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக [QE][QS2]அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. [QE]
32. [QS]மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; [QE][QS2]மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது. [QE]
33. [QS]இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், [QE][QS2]மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன. [QE][PBR]
34. [QS]யெகோவா தாம் கட்டளையிட்டபடி [QE][QS2]அந்த மக்களை அவர் அழிக்கவில்லை. [QE]
35. [QS]மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி, [QE][QS2]அவர்களுடைய பழக்கவழக்கங்களைத் தாங்களும் கைக்கொண்டார்கள். [QE]
36. [QS]அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; [QE][QS2]அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது. [QE]
37. [QS]அவர்கள் தங்கள் மகன்களையும் [QE][QS2]மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள். [QE]
38. [QS]இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய, [QE][QS2]குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; [QE][QS]அவர்கள் கானானிய விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்; [QE][QS2]அதினால் நாடு அவர்களுடைய இரத்தத்தால் தூய்மைக்கேடு அடைந்தது. [QE]
39. [QS]அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்; [QE][QS2]அவர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் விபசாரம் செய்தனர். [QE][PBR]
40. [QS]ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார், [QE][QS2]தமது உரிமைச் சொத்தானவர்களை வெறுத்தார். [QE]
41. [QS]அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்; [QE][QS2]அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆளுகை செய்தார்கள். [QE]
42. [QS]அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி, [QE][QS2]தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள். [QE]
43. [QS]ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்; [QE][QS2]அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு, [QE][QS2]பாவஞ்செய்து விழுந்து போனார்கள். [QE]
44. [QS]ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ, [QE][QS2]அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார். [QE]
45. [QS]அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து, [QE][QS2]தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார். [QE]
46. [QS]அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும், [QE][QS2]அவர்களுக்கு அனுதாபம் காட்டும்படி செய்தார். [QE][PBR]
47. [QS]எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும், [QE][QS2]பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்; [QE][QS]அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, [QE][QS2]உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம். [QE][PBR] [PBR]
48. [QS]இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து [QE][QS2]நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். [QE][PBR] [QS]மக்கள் அனைவரும் சொல்லட்டும்: “ஆமென்!” [QE][PBR] [QS]யெகோவாவைத் துதி. [QE]