1. யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; [QBR2] அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். [QBR]
2. அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; [QBR2] அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். [QBR]
3. அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; [QBR2] யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. [QBR]
4. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; [QBR2] எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
5. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், [QBR2] அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். [QBR]
6. அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, [QBR2] அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள். [QBR]
7. அவரே நமது இறைவனாகிய யெகோவா; [QBR2] அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
8. அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், [QBR2] ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், [QBR]
9. ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், [QBR2] ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். [QBR]
10. அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், [QBR2] இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது: [QBR]
11. “உங்களுடைய உரிமைச்சொத்தாக, [QBR2] கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”
12. அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், [QBR2] உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, [QBR]
13. அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், [QBR2] ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். [QBR]
14. அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; [QBR2] அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: [QBR]
15. “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; [QBR2] என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”
16. எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, [QBR2] அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்; [QBR]
17. அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, [QBR2] அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார். [QBR]
18. எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; [QBR2] அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது. [QBR]
19. அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், [QBR2] யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று [QBR2] நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது. [QBR]
20. எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; [QBR2] மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான். [QBR]
21. அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, [QBR2] தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான். [QBR]
22. தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், [QBR2] ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான்.
23. அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; [QBR2] யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான். [QBR]
24. யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; [QBR2] அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார். [QBR]
25. அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், [QBR2] அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், [QBR2] எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார். [QBR]
26. அவர் தமது அடியானாகிய மோசேயையும், [QBR2] தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். [QBR]
27. இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், [QBR2] காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள். [QBR]
28. யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக [QBR2] எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? [QBR2] அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார். [QBR]
29. அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், [QBR2] அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது. [QBR]
30. அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; [QBR2] அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன. [QBR]
31. இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; [QBR2] கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன. [QBR]
32. அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் [QBR2] அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார். [QBR]
33. அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, [QBR2] அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார். [QBR]
34. அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், [QBR2] பச்சைப்புழுக்களும் வந்தன. [QBR]
35. அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் [QBR2] அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது. [QBR]
36. பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், [QBR2] அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார். [QBR]
37. அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், [QBR2] அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை. [QBR]
38. இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், [QBR2] இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள்.
39. யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; [QBR2] இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார். [QBR]
40. அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; [QBR2] பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார். [QBR]
41. அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; [QBR2] அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது.
42. ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, [QBR2] தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார். [QBR]
43. அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; [QBR2] தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார். [QBR]
44. அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; [QBR2] அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். [QBR]
45. அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, [QBR2] அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, [QBR2] யெகோவா இப்படிச் செய்தார். அல்லேலூயா. [PE]