1. [QS]யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; [QE][QS2]அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். [QE]
2. [QS]அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; [QE][QS2]அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். [QE]
3. [QS]அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; [QE][QS2]யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. [QE]
4. [QS]யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; [QE][QS2]எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். [QE][PBR]
5. [QS]அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், [QE][QS2]அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். [QE]
6. [QS]அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, [QE][QS2]அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள். [QE]
7. [QS]அவரே நமது இறைவனாகிய யெகோவா; [QE][QS2]அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. [QE][PBR]
8. [QS]அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், [QE][QS2]ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், [QE]
9. [QS]ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், [QE][QS2]ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். [QE]
10. [QS]அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், [QE][QS2]இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது: [QE]
11. [QS]“உங்களுடைய உரிமைச்சொத்தாக, [QE][QS2]கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” [QE][PBR]
12. [QS]அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், [QE][QS2]உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, [QE]
13. [QS]அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், [QE][QS2]ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். [QE]
14. [QS]அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; [QE][QS2]அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: [QE]
15. [QS]“நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; [QE][QS2]என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” [QE][PBR]
16. [QS]எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, [QE][QS2]அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்; [QE]
17. [QS]அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, [QE][QS2]அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார். [QE]
18. [QS]எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; [QE][QS2]அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது. [QE]
19. [QS]அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், [QE][QS2]யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று [QE][QS2]நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது. [QE]
20. [QS]எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; [QE][QS2]மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான். [QE]
21. [QS]அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, [QE][QS2]தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான். [QE]
22. [QS]தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், [QE][QS2]ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான். [QE][PBR]
23. [QS]அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; [QE][QS2]யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான். [QE]
24. [QS]யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; [QE][QS2]அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார். [QE]
25. [QS]அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், [QE][QS2]அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், [QE][QS2]எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார். [QE]
26. [QS]அவர் தமது அடியானாகிய மோசேயையும், [QE][QS2]தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். [QE]
27. [QS]இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், [QE][QS2]காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள். [QE]
28. [QS]யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக [QE][QS2]எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? [QE][QS2]அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார். [QE]
29. [QS]அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், [QE][QS2]அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது. [QE]
30. [QS]அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; [QE][QS2]அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன. [QE]
31. [QS]இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; [QE][QS2]கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன. [QE]
32. [QS]அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் [QE][QS2]அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார். [QE]
33. [QS]அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, [QE][QS2]அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார். [QE]
34. [QS]அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், [QE][QS2]பச்சைப்புழுக்களும் வந்தன. [QE]
35. [QS]அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் [QE][QS2]அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது. [QE]
36. [QS]பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், [QE][QS2]அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார். [QE]
37. [QS]அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், [QE][QS2]அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை. [QE]
38. [QS]இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், [QE][QS2]இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள். [QE][PBR]
39. [QS]யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; [QE][QS2]இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார். [QE]
40. [QS]அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; [QE][QS2]பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார். [QE]
41. [QS]அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; [QE][QS2]அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது. [QE][PBR]
42. [QS]ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, [QE][QS2]தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார். [QE]
43. [QS]அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; [QE][QS2]தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார். [QE]
44. [QS]அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; [QE][QS2]அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். [QE]
45. [QS]அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, [QE][QS2]அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, [QE][QS2]யெகோவா இப்படிச் செய்தார். [QE][PBR] [QS]அல்லேலூயா. [QE]