தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; [QBR2] மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.
2. யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; [QBR2] அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார். [QBR2]
3. அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; [QBR] அவர் மேகங்களைத் தமது தேராக்கி, [QBR2] காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார். [QBR]
4. அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், [QBR2] நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.
5. அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; [QBR2] அது ஒருபோதும் அசைக்கப்படாது. [QBR]
6. உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; [QBR2] வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது. [QBR]
7. ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; [QBR2] உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது. [QBR]
8. அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, [QBR2] பள்ளத்தாக்குகளில் இறங்கி, [QBR2] நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன. [QBR]
9. அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; [QBR2] அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.
10. அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; [QBR2] அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. [QBR]
11. அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; [QBR2] காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. [QBR]
12. ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; [QBR2] கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. [QBR]
13. அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; [QBR2] பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. [QBR]
14. அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், [QBR2] மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், [QBR2] அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: [QBR]
15. மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், [QBR2] அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், [QBR2] அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். [QBR]
16. யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு [QBR2] நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். [QBR]
17. அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; [QBR2] கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. [QBR]
18. உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், [QBR2] செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
19. காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; [QBR2] சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். [QBR]
20. நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; [QBR2] காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. [QBR]
21. சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; [QBR2] இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. [QBR]
22. சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; [QBR2] அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. [QBR]
23. அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; [QBR2] மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.
24. யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! [QBR2] அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; [QBR2] பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. [QBR]
25. அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; [QBR2] பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா [QBR2] வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. [QBR]
26. அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; [QBR2] நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.
27. நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று [QBR2] அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. [QBR]
28. நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, [QBR2] அவை சேகரித்துக்கொள்கின்றன; [QBR] நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, [QBR2] அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. [QBR]
29. நீர் உமது முகத்தை மறைக்கும்போது, [QBR2] அவை திகைக்கின்றன; [QBR] நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, [QBR2] அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. [QBR]
30. நீர் உமது ஆவியை அனுப்புகையில், [QBR2] அவை படைக்கப்படுகின்றன; [QBR2] நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.
31. யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; [QBR2] யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. [QBR]
32. அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; [QBR2] மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.
33. நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; [QBR2] நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QBR]
34. நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, [QBR2] என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. [QBR]
35. ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; [QBR2] கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 104 / 150
சங்கீதம் 104:132
1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர். 2 யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார். 3 அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; அவர் மேகங்களைத் தமது தேராக்கி, காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார். 4 அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார். 5 அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; அது ஒருபோதும் அசைக்கப்படாது. 6 உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது. 7 ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது. 8 அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன. 9 அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது. 10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. 11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. 12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. 13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. 14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: 15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். 16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். 17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. 18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன. 19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். 20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. 21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. 22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. 23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான். 24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. 25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. 26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். 27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. 28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. 29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. 30 நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். 31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. 32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. 33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். 34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. 35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 104 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References