1. [QS]என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. [QE][PBR] [QS]என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; [QE][QS2]மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர். [QE][PBR]
2. [QS]யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; [QE][QS2]அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார். [QE]
[QS2]3. அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; [QE][QS]அவர் மேகங்களைத் தமது தேராக்கி, [QE][QS2]காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார். [QE]
4. [QS]அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், [QE][QS2]நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார். [QE][PBR]
5. [QS]அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; [QE][QS2]அது ஒருபோதும் அசைக்கப்படாது. [QE]
6. [QS]உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; [QE][QS2]வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது. [QE]
7. [QS]ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; [QE][QS2]உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது. [QE]
8. [QS]அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, [QE][QS2]பள்ளத்தாக்குகளில் இறங்கி, [QE][QS2]நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன. [QE]
9. [QS]அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; [QE][QS2]அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது. [QE][PBR]
10. [QS]அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; [QE][QS2]அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. [QE]
11. [QS]அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; [QE][QS2]காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. [QE]
12. [QS]ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; [QE][QS2]கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. [QE]
13. [QS]அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; [QE][QS2]பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. [QE]
14. [QS]அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், [QE][QS2]மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், [QE][QS2]அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: [QE]
15. [QS]மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், [QE][QS2]அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், [QE][QS2]அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். [QE]
16. [QS]யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு [QE][QS2]நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். [QE]
17. [QS]அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; [QE][QS2]கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. [QE]
18. [QS]உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், [QE][QS2]செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன. [QE][PBR]
19. [QS]காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; [QE][QS2]சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். [QE]
20. [QS]நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; [QE][QS2]காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. [QE]
21. [QS]சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; [QE][QS2]இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. [QE]
22. [QS]சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; [QE][QS2]அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. [QE]
23. [QS]அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; [QE][QS2]மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான். [QE][PBR]
24. [QS]யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! [QE][QS2]அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; [QE][QS2]பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. [QE]
25. [QS]அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; [QE][QS2]பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா [QE][QS2]வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. [QE]
26. [QS]அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; [QE][QS2]நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். [QE][PBR]
27. [QS]நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று [QE][QS2]அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. [QE]
28. [QS]நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, [QE][QS2]அவை சேகரித்துக்கொள்கின்றன; [QE][QS]நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, [QE][QS2]அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. [QE]
29. [QS]நீர் உமது முகத்தை மறைக்கும்போது, [QE][QS2]அவை திகைக்கின்றன; [QE][QS]நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, [QE][QS2]அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. [QE]
30. [QS]நீர் உமது ஆவியை அனுப்புகையில், [QE][QS2]அவை படைக்கப்படுகின்றன; [QE][QS2]நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். [QE][PBR]
31. [QS]யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; [QE][QS2]யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. [QE]
32. [QS]அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; [QE][QS2]மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. [QE][PBR]
33. [QS]நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; [QE][QS2]நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QE]
34. [QS]நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, [QE][QS2]என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. [QE]
35. [QS]ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; [QE][QS2]கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். [QE][PBR] [QS]என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. [QE][PBR] [QS]அல்லேலூயா. [QE]