1. யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; [QBR2] உமக்கே நான் துதி பாடுவேன். [QBR]
2. நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; [QBR2] நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் [QBR2] என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். [QBR]
3. தீங்கான செயல்களை [QBR2] நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; [QBR2] அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. [QBR]
4. வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; [QBR2] நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
5. தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை [QBR2] நான் தண்டிப்பேன்; [QBR] கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை [QBR2] நான் சகிக்கமாட்டேன்.
6. நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், [QBR2] அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; [QBR] குற்றமற்றவனாய் நடப்பவர்களே [QBR2] எனக்கு ஊழியம் செய்வார்கள்.
7. வஞ்சனை செய்யும் யாரும் [QBR2] என் வீட்டில் வாழமாட்டார்கள்; [QBR] பொய்ப் பேசுபவர் யாரும் [QBR2] என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
8. நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் [QBR2] காலைதோறும் தண்டிப்பேன்; [QBR] தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் [QBR2] யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன். [PE]